உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலரும் காலையில் வெந்நீர் குடிப்பதையும் நடைபயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், முதலில் வெந்நீர் குடிக்க வேண்டுமா அல்லது நடைபயிற்சி முடித்த பிறகு குடிக்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
உடல் எடையை குறைக்க வெந்நீர்
காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து நடைபயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். நடைபயிற்சியின் போது சோர்வு ஏற்படுவதை குறைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வெந்நீர் குடித்த பிறகு நடைபயிற்சி செய்வது சிறந்த தேர்வாகும்.
இதையும் படிங்க : சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
நடைபயிற்சி செய்த பிறகு உடல் வியர்வை மூலம் நீர்ச்சத்தை இழக்கும். எனவே நடைபயிற்சி முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வெடுத்து வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்திருந்தால் தண்ணீர் குடிப்பது அவசியம்.
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். றிப்பாக செரிமானம், உடல் சுத்திகரிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும், உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் குறைக்கலாம்.
இதையும் படிங்க : புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதம் : புதிய மாத்திரை கண்டுபிடிப்பு!
சளி, இருமல் அல்லது மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது வெந்நீர் குடிப்பது சுவாசப்பாதையை சுத்தப்படுத்த உதவும். தினசரி அளவான வெந்நீர் குடிப்பது செரிமானம், இரத்த ஓட்டம், உடல் சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவலாம். ஆனால் மிகவும் சூடான நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
