காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக, கோபி என்பவரிடம் இருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் விமல் காசோலை வழங்கியிருந்தார். பின்னர், அந்த காசோலையை சம்பந்தப்பட்டவர் வங்கியில் செலுத்தியபோது, விமலின் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் அது திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது நடிகர் விமல் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார்.

நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

Related Post

Latest News