சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

கோடைக் காலத்தின் தாகத்தைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சி தரும் ஒரு சிறந்த இயற்கை உணவாக நுங்கு உள்ளது. இந்த நுங்கை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தாராளமாக நுங்குகளைத் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நுங்கில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இதன் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு என்பதால், இதனைச் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராது.

இதையும் படிங்க : எச்சரிக்கை : வெயிலில் சென்று வந்தவுடன் நேராக ஏ.சி யில் நிற்பவரா நீங்கள்?

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீர் வறட்சியிலிருந்து உடலைத் தற்காத்துக் கொள்ள நுங்கு பெரிதும் உதவுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வை நீக்கி, உடனடி புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது.

நுங்கில் உள்ள சத்துக்கள் என்ன?

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் குளுக்கோஸ் இரத்தத்தில் மெதுவாகக் கலக்க வழிவகை செய்கிறது. நுங்கில் உடலுக்குத் தேவையான வைட்டமின் பி, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை மட்டும் அளவோடு சாப்பிடுவது மிகச் சிறந்தது. நுங்கின் மேல் இருக்கும் இளஞ்சிவப்பு நிறத் தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

இதையும் படிங்க : தர்பூசணி சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லைனா பிரச்சனைதான்

பெண்களுக்கான நன்மைகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட நுங்கு பெரிதும் உதவுகிறது. நுங்கில் நிறைந்துள்ள ‘அந்த்யூசைன்’ எனப்படும் இயற்கை வேதிப்பொருள், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

Related Post

Latest News