ஏன் குங்குமப்பூவின் விலை அதிகமாக உள்ளது? உண்மையான காரணம் இதுதான்..!

குங்குமப்பூ (Saffron) உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மசாலாப் பொருளாகக் கருதப்படுகிறது. சில உயர்தர குங்குமப்பூ வகைகள் ஒரு கிராமுக்கே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமையல், இனிப்புகள், பாரம்பரிய மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் என பல துறைகளில் பயன்படுத்தப்படும் இந்த நறுமணப் பொருள் ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

குங்குமப்பூ என்றால் என்ன?

குங்குமப்பூ என்பது குரோக்கஸ் சாடிவஸ் என்ற பூவின் சிவப்பு நிற இழைகளிலிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் வெறும் 3 சிவப்பு இழைகள் மட்டுமே இருக்கும். அவற்றை மிகவும் கவனமாக கைகளால் பறித்து, உலர்த்திய பிறகே நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ கிடைக்கிறது. இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், மொராக்கோ மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன.

இதையும் படிங்க : சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் காற்று நம்மை ஏமாற்றுவதற்கா? – உண்மை என்ன?

முழுவதும் கைகளால் அறுவடை

குங்குமப்பூ விலை அதிகமாக இருப்பதற்கான மிகப்பெரிய காரணம் அதன் அறுவடை முறை. ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று இழைகளை மட்டுமே கைகளால் பிரித்தெடுக்க வேண்டும். 1 கிராம் குங்குமப்பூ தயாரிக்க 150-க்கும் மேற்பட்ட பூக்கள் தேவைப்படும்.

சுமார் 70,000 முதல் 75,000 பூக்கள் தேவைப்பட்டால்தான் சுமார் 450 கிராம் முதல் 500 கிராம் குங்குமப்பூ கிடைக்கும். இவ்வளவு பெரிய உழைப்பு காரணமாகவே இதன் விலை அதிகரிக்கிறது.

குங்குமப்பூவின் விலை

வருடத்தில் சில வாரங்கள் மட்டுமே பூக்கும்

குங்குமப்பூ செடிகள் பொதுவாக அக்டோபர் முதல் நவம்பர் வரை சில வாரங்கள் மட்டுமே பூக்கும். இதனால் அறுவடைக்கு மிகவும் குறுகிய கால அவகாசமே கிடைக்கும். அந்த நேரத்தில் மழை அல்லது காலநிலை பாதித்தால் முழு விளைச்சலும் பாதிக்கப்படும்.

சூரிய உதயத்திற்கு முன்பே பூக்களை பறிக்க வேண்டும்

குங்குமப்பூ பூக்கள் மிகவும் மென்மையானவை. சூரிய ஒளி அதிகரிப்பதற்கு முன்பே அவற்றை பறிக்க வேண்டும். இல்லையெனில் பூக்கள் சேதமடையும். இதனால் விவசாயிகள் அதிகாலை முதலே அறுவடை பணியில் ஈடுபடுவார்கள்.

இதையும் படிங்க : இந்த மீனோட விலை கிலோ 15 ஆயிரம் ரூபாய் ; அப்படி என்ன இருக்கு இதுல?

உலர்த்தும் பணி

அறுவடை செய்யப்பட்ட இழைகளை உடனடியாக சரியான முறையில் உலர்த்த வேண்டும். அதிக ஈரப்பதம் இருந்தால் நறுமணம் குறையும். நிறம் மங்கும். தரம் பாதிக்கப்படும். இதனால், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

உற்பத்தி குறைவு

உலகம் முழுவதும் குங்குமப்பூவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் குறுகிய அறுவடை காலம், அதிக மனித உழைப்பு குறைந்த உற்பத்தி ஆகிய காரணங்களால் உற்பத்தியை அதிகரிப்பது எளிதல்ல. இதன் காரணமாகவும் விலையை உயர்கிறது.

உண்மையான குங்குமப்பூவை எப்படி கண்டறிவது?

விலை அதிகமாக இருப்பதால் சந்தையில் போலி குங்குமப்பூவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. உண்மையான குங்குமப்பூ அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். நுனிப்பகுதியில் சிறிது ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம் இருக்கலாம். முழுவதும் ஒரே மாதிரி சிவப்பு அல்லது பிரகாசமான நிறத்தில் இருந்தால் கவனமாக இருக்கவும்.

Related Post

Latest News