இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் தனது நான்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக இருந்த ரூ.299 திட்டமும் அடங்கும். இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட 4 ரீசார்ஜ் பிளான்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து ரூ.299, ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய நான்கு ரீசார்ஜ் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
நீக்கப்பட்ட திட்டங்களில் கிடைத்த பலன்கள்
ரூ.299 திட்டம்: 28 நாட்கள், தினமும் 1.5 ஜிபி டேட்டா.
ரூ.319 திட்டம்: 30 நாட்கள், தினமும் 1.5 ஜிபி டேட்டா.
ரூ.579 திட்டம்: 56 நாட்கள், தினமும் 1.5 ஜிபி டேட்டா.
ரூ.619 திட்டம்: 60 நாட்கள், தினமும் 1.5 ஜிபி டேட்டா.
ரூ.649 திட்டம்: 56 நாட்கள், தினமும் 2 ஜிபி டேட்டா
குறைந்த விலை திட்டங்களில் என்ன மாற்றம்?
தற்போது ரூ.199 பிளான் மற்றும் ரூ.219 பிளான் தொடர்ந்து கிடைக்கிறது. இந்த இரண்டு பிளான்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ.199 பிளானில் மொத்தம் 2GB டேட்டா, ரூ.219 பிளானில் மொத்தம் 3GB டேட்டா வழங்கப்படும்.
ரூ.299 பிளானுக்கு பதிலாக ரூ.349 பிளான்
ரூ.299 பிளானில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இந்த பிளான் நீக்கப்பட்டுள்ளதால் ரூ.349 பிளான் தேர்வு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரூ.349 பிளானில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படும். 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.
யாருக்கு கூடுதல் சுமை?
குறைந்த அளவு டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை பிளான்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால் தினசரி அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் அதிக விலை கொண்ட பிளான்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
