இனிமேல் டிப்ஸ் கேட்கக்கூடாது ; Uber, Uber உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Uber, Ola உள்ளிட்ட கேப் புக்கிங் செயலிகளில் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக பயணிகளிடம் டிப்ஸ் கேட்கும் நடைமுறைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ் கேட்கக்கூடாது

பயணம் முடிவதற்கு முன்பாக செயலியில் டிப்ஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தும் வசதி வழங்கக்கூடாது. பயணம் முடிந்த பிறகு, பயணி தனது விருப்பத்தின் அடிப்படையில் டிரைவருக்கு டிப்ஸ் வழங்கலாம்.

ஏன் இந்த நடவடிக்கை?

கேப் புக்கிங் செயலிகளில் பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் மற்றும் கூடுதல் கட்டண விருப்பங்கள் காட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்தன. முன்கூட்டியே டிப்ஸ் வழங்கினால் கேப் விரைவாக கிடைக்கும் என்ற எண்ணம் பயணிகளுக்கு ஏற்படக்கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதற்கு முன்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் கேப் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இதுபோன்ற நடைமுறைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Post

Latest News