இலவச வை-ஃபை மூலம் உங்கள் கணக்கு திருடப்படலாம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

பயணங்களின்போது ஹோட்டல், விமான நிலையம், போன்ற இடங்களில் இலவச வை-ஃபை வசதி கிடைக்கிறது. மொபைல் டேட்டா சரியாக கிடைக்காத நேரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இதுபோன்ற இலவச வை-ஃபை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

இலவச வை-ஃபை நெட்வொர்க்குகளை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெறுவதாக மைக்ரோசாஃப்ட் த்ரெட் இன்டெலிஜென்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் அலுவலக கணக்குகள் முக்கிய இலக்குகளாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் ஆய்வின்படி, ‘CaptiveCrunch’ என குறிப்பிடப்படும் சைபர் தாக்குதல் பிரசாரம் 2026 மே மாத தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் வை-ஃபை நெட்வொர்க்குகளை குறிவைத்து வருவதாக கூறப்படுகிறது.

முடிந்தவரை மொபைல் Hotspot, eSIM அல்லது தனிப்பட்ட Internet Connection பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக Software Update, Certificate, Browser Update அல்லது Security Tool-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

Related Post

Latest News