8,000mAh பேட்டரியுடன் அறிமுகமான Redmi Note 17… எப்போது விற்பனைக்கு வரும்?

சியோமி நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 17-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேட்டரி , 120Hz OLED திரை, Qualcomm Snapdragon 4 Gen 4 செயலி மற்றும் பல ஆண்டுகள் மென்பொருள் அப்டேட் என பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.

Redmi Note 17-ன் முக்கிய அம்சங்கள்

Android 16
6.99 இன்ச் Full HD+ OLED திரை
Full HD+ (2396 × 1080)
120Hz Refresh Rate
240Hz Touch Sampling Rate
6GB / 8GB LPDDR4X RAM
128GB UFS 2.2 Storage
8,000mAh பெரிய பேட்டரி
45W Fast Charging
50MP கேமரா
8MP செல்ஃபி கேமரா
2030 வரை 4 ஆண்டுகள் Android OS அப்டேட்கள்
2032 வரை 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள்

உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

Redmi Note 17 விலை

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது:

மாடல் அறிமுக சலுகை விலை
6GB + 128GB ரூ.24,999
8GB + 128GB ரூ.27,999

இந்த அறிமுக விலைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன.

எப்போது விற்பனை?

ஆகஸ்ட் 13 மதியம் 12 மணி முதல் Xiaomi அதிகாரப்பூர்வ இணையதளம், Amazon, Xiaomi Retail Stores மூலம் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போன் Arctic Blue, Dark Night மற்றும் Starlight Purple ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

Related Post

Latest News