மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை தரும் செய்தியை அண்மைய அறிவியல் ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. காபி மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளில் நிறைந்துள்ள ‘பாலிபினால்கள்’ எனப்படும் இயற்கைச் சேர்மங்கள், மார்பகப் புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்கவும், நோய் மீண்டும் வருவதைத் தடுக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 6,94,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது ஆயுளை நீட்டிக்க உதவும் என்பதை மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : துவைக்காத சாக்ஸை மீண்டும் மீண்டும் போட்டா இந்த நோய் வருமாம்!
புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்ட பாலிபினால்களை அதிகம் உட்கொள்வது மார்பகப் புற்றுநோய் மீண்டும் வருவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கணிசமாகக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 95 பெண்களை சுமார் 11.5 ஆண்டுகள் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட உணவில் பாலிபினால்களின் அளவை விரிவாக மதிப்பீடு செய்தனர்.
ஆய்வின் முடிவில், ‘பீனாலிக் அமிலங்கள்’ மற்றும் ‘லிக்னான்கள்’ போன்ற பாலிபினால் வகைகளை அதிகம் எடுத்துக்கொண்ட பெண்களுக்குப் புற்றுநோயினால் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பது தெரியவந்தது.
நிபுணர்களின் எச்சரிக்கை
இந்த ஆய்வு நேர்மறையான முடிவுகளைத் தந்தபோதிலும், புற்றுநோயாளிகள் உடனே அதிக அளவில் காபி குடிக்கத் தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க : உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கேன்சர் வருமா?
