ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் “கிரீன் மேஜிக்” பால் பாக்கெட் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக அண்மைக்காலமாகச் செய்திகள் வெளியாகி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின.
ஆவின் பால் விநியோகம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வந்த செய்திக்கு தமிழ்நாடு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை.
நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் ஆவின் நிறுவனம் தொடர்ந்து தடையின்றி விநியோகம் செய்து வருகிறது.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் இது போன்ற தவறான செய்திகளை நம்பி எந்தவித குழப்பமும் அடைய வேண்டாம்.
ஆவின் கிரீன் மேஜிக் பால் வழக்கம் போல் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
