ஜெர்மனியில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்மைக் காலமாக விமானங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து ஹைதராபாத் நோக்கி பயணித்த லுஃப்தான்சா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்த குறித்து தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மிரட்டல் தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை IndiGo நிறுவனத்தின் விமானத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அகமதாபாத்–லக்னோ–டெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அந்த விமானத்தின் கழிவறையில் கையால் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சவுதரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post

Latest News