அசாம் மாநிலத்தின், ஜோர்ஹாட் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ராணுவ சரக்கு விமானம் இன்று (ஜூன் 13) தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்ட தகவலில், “AN-32 ரக விமானம் இன்று ஜோர்ஹாட்டில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த உடனே இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்துக்கான முழு காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், AN-32 ராணுவ விமானங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிலை மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
