ரயில் 5 மணி நேரம் லேட்.. பிளாட்பார டிக்கெட் வைத்திருந்தவருக்கு ரூ.500 அபராதம்

மும்பையைச் சேர்ந்த ஆதித்யா என்பவர், தனது உறவினரை வழிஅனுப்புவதற்காகக் கல்யாண் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் அனுப்ப வந்த ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. ரயில் வரும் வரை காத்திருந்த ஆதித்யா, தனது உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது ரயில் நிலைய வாசலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் (TTE), ஆதித்யாவின் பிளாட்பார டிக்கெட்டைச் சோதித்துள்ளார். அது காலாவதியாகிவிட்டதாகக் கூறி, ஆதித்யாவுக்கு ரூ.500 அபராதம் விதித்தார். ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் தான் உள்ளே இருக்க வேண்டியது வந்தது என்று ஆதித்யா விளக்கியும், பரிசோதகர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ரயில்வே விதிகளின்படி, ஒரு பிளாட்பார டிக்கெட்டின் ஆயுட்காலம் வெறும் 2 மணி நேரம் மட்டுமே. டிக்கெட் வாங்கிய 2 மணி நேரத்திற்குள் நபர் பிளாட்பாரத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். அந்த விதியின் அடிப்படையிலேயே ஆதித்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் இந்த விசித்திர விதியால் அதிருப்தியடைந்த ஆதித்யா, இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரயில் தாமதமாக வந்ததற்கு ரயில்வே நிர்வாகம் தான பொறுப்பு? அதற்குப் பயணிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்? இந்தத் தாமதத்திற்கு யார் அபராதம் கட்டுவது?” என்று ரயில்வே துறையை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

Latest News