வீடுபுகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக செயலாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வெற்றிக் கழக வடக்கு பகுதி செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மவுண்ட் போலீசார் த.வெ.க வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்திற்குப் பிறகு வேம்புலி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, வேம்புலியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக த.வெ.க மாவட்டச் செயலாளர் ஏ. ஈசிஆர் சரவணன் அறிவித்துள்ளார்.

Related Post

Latest News