பேருந்தில் லேப்டாப் திருட முயன்ற த.வெ.க. செயலாளர் கைது!

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணித்த சிவில் என்ஜினீயரின் ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை திருட முயன்றதாக தமிழக வெற்றிக் கழக கிளை செயலாளர் கண்ணப்பன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (39), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். வேலை தொடர்பாக அவர் அரசு பஸ்சில் சென்னை இருந்து மதுரைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

பயணத்தின் போது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமார் தனது ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினியை பையில் வைத்து விட்டு கீழே இறங்கியுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவர், தனது பையை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற ஒருவரை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கண்ணப்பன் (32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை செயலாளராக பதவி வகித்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News