பா.ஜ.க.வில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி இன்று அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள அவர், இன்னும் சற்று நேரத்தில் த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ-வாக வென்றவர் விஜயதாரணி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார்.
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், பா.ஜ.க-வின் பாரம்பரிய வாக்கு வங்கியை த.வெ.க பெருமளவில் கைப்பற்றிவிட்டதாகவும் விஜயதாரணி அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக அவர் தற்போது பா.ஜ.க-விலிருந்து விலகி த.வெ.க-வில் இணைய முடிவு செய்துள்ளார்.
