சாலைப் பாதுகாப்பில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா முழுவதும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 54,122 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் பட்டியலில் மாநில வாரியாகப் பார்க்கும்போது, தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாத காரணத்தால் 7,744 பேர் உயிரிழந்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 5,946 மரணங்கள், மத்தியப் பிரதேசத்தில் 5,543 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
