டீ குடிக்கும் போது தெரியாமல் கூட இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க..!

தேநீர் உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். பல நாடுகளில் இந்தப் பானம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இது ஓய்வு, அமைதி, விருந்தோம்பல், உறவுப் பிணைப்பு மற்றும் பாரம்பரியத்தின் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இது புத்துணர்ச்சி தரும் பானமாக இருந்தாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடப்படும் சில உணவுகள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

  1. இரும்பு மற்றும் புரதச்சத்து அதிகமுள்ள உணவுகள்

பயறு வகைகள், பருப்பு மற்றும் பச்சை கீரைகள் போன்றவற்றுடன் டீ குடிப்பது இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை குறைக்கலாம். இதனால் உடல் பலவீனம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  1. சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை டீ உடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து செரிமானத்தை பாதிக்கலாம்.

  1. எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள்

பஜ்ஜி, சமோசா போன்றவை டீயுடன் மிகவும் பிரபலமாக இருந்தாலும், இது வயிறு உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க : ப்ளூபெர்ரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

  1. பால் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள்

பால் பொருட்கள் டீயின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உறிஞ்சுதலைக் குறைத்து, சிலருக்கு செரிமான பிரச்சனையை உருவாக்கலாம்.

  1. காரமான மற்றும் அதிக அமிலத்தன்மை உணவுகள்

மிகவும் காரமான உணவுகள் டீயுடன் சேரும்போது வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

டீ எப்போது குடிப்பது நல்லது?

காலை உணவுக்குப் பிறகு டீ குடிப்பது நல்லது. வயிறு காலியாக இல்லாததால் அமிலத்தன்மை குறையும் மற்றும் உடல் விழிப்பு அதிகரிக்கும். மதிய உணவுக்குப் பிறகு 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து டீ குடிக்கலாம். இது சோர்வை குறைத்து வேலை செய்யும் திறனை அதிகரிக்க உதவும். மாலை 4 முதல் 6 மணிக்குள் டீ குடிப்பது பலருக்கும் ஏற்ற நேரம். ஆனால் இரவு நேரம் அல்லது தூக்கத்திற்கு முன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க : சிலிண்டர் விலை உயர்வா? சமையல் கியாஸ் சேமிக்க உதவும் எளிய வழிகள்!

டீ அதிகம் குடித்தால் என்ன ஆகும்?

அதிகமாக டீ குடித்தால் தூக்கமின்மை ஏற்படலாம். அதில் உள்ள கஃபீன் காரணமாக இரவு தூக்கம் பாதிக்கப்படும். இதய துடிப்பு அதிகரிப்பு, மனஅழுத்தம் அல்லது பதட்டம் போன்றவை சிலருக்கு ஏற்படலாம். வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து எரிச்சல் அல்லது அசௌகரியம் வரலாம்.

டீ அதிகமாக குடிப்பது உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை குறைக்கலாம். இதனால் நீண்ட காலத்தில் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு இருக்கலாம். மேலும் டீக்கு அடிமையாகும் பழக்கம் உருவாகி, டீ குடிக்காதால் தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம். பொதுவாக ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் டீ மிதமான அளவாக கருதப்படுகிறது.

Related Post

Latest News