இரவில் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? இந்த விஷயங்களை மட்டும் கவனியுங்கள்

சிக்கன் உடலுக்குத் தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, உடல் வலிமைக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இது ஒரு சிறந்த உணவாகும். உலகம் முழுவதும் பிரபலமான உணவாக சிக்கன் உள்ளது.

இந்தியாவில் சிக்கனை பல்வேறு வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர். சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் ஃப்ரை, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் என ஏராளமான உணவு வகைகள் உள்ளன. அதே நேரத்தில், இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?

பொதுவாக ஆரோக்கியமான நபர்கள் இரவு நேரத்திலும் சிக்கனை அளவோடு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது அனைவருக்கும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அதிக எண்ணெய், மசாலா மற்றும் காரத்துடன் தயாரிக்கப்படும் சிக்கன் உணவுகள் சிலருக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே, இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிட விரும்புபவர்கள் எளிமையாக சமைக்கப்பட்ட உணவுகளை தேர்வு செய்வது சிறந்தது.

இதையும் படிங்க : தினமும் ஒரு வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

ஃப்ரைடு சிக்கனை தவிர்ப்பது நல்லது

இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடும்போது எண்ணெயில் அதிகமாக பொரிக்கப்பட்ட சிக்கன் வகைகளை குறைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சிக்கன் ஃப்ரை, அதிக எண்ணெயில் தயாரிக்கப்படும் சில்லி சிக்கன் போன்ற உணவுகள் இரவு நேரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்காமல் இருக்கலாம்.

அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்க்கப்பட்ட சிக்கன் உணவுகள் இரவில் சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

அதற்கு பதிலாக கிரில், ஸ்டீம் அல்லது குறைந்த எண்ணெயில் சமைக்கப்பட்ட சிக்கனை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற கொழுப்பு மற்றும் அதிகப்படியான எண்ணெய் உட்கொள்ளுதலை குறைக்க முடியும்.

இதையும் படிங்க : இனிப்பான விஷம்., கூல்ட்ரிங்க்ஸில் மறைந்திருக்கும் ஆபத்துகள்

யார் இரவில் சிக்கனை தவிர்க்க வேண்டும்?

சிக்கனை மட்டும் அதிக அளவில் சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

அஜீரணம், அமிலத்தன்மை அல்லது அடிக்கடி செரிமானப் பிரச்சனை ஏற்படுபவர்கள் இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எண்ணெய் மற்றும் மசாலா அதிகம் உள்ள சிக்கன் உணவுகள் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

Related Post

Latest News