பொதுவாக மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்பு எடுக்கும் மாத்திரைகளை விட சாப்பிட்ட பிறகு எடுக்கும் மாத்திரைகளே அதிகம். ஆனால், அதை எவ்வளவு நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை இன்னும் சிலர் காபி, டீ யுடன் மாத்திரை சாப்பிடுவார்கள். இது சரியான பழக்கம்தானா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
வெறும் வயிற்றில் எப்போது மருந்து சாப்பிட வேண்டும்?
சில மருந்துகள் உணவுக்கு முன் அல்லது வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன. இத்தகைய மருந்துகளை பொதுவாக, உணவுக்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கேன்சர் வருமா?
மருந்தை தாமதமாக எடுத்தால் என்ன நடக்கும்?
“உணவுக்குப் பிறகு” என்று மருத்துவர் அல்லது மருந்தின் லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தால், பொதுவாக 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது. மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தை அடிக்கடி தவறவிட்டால், அதன் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால், தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நீரிழிவு மருந்துகள் தாமதமானால், ரத்த சர்க்கரை அளவு மாறுபட வாய்ப்பு உள்ளது.
காபி அல்லது டீயுடன் மாத்திரை சாப்பிடலாமா?
பொதுவாக காபி அல்லது டீயுடன் மாத்திரை எடுத்துக்கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், காபி, டீ யில் உள்ள கஃபீன் சில மருந்துகளின் செயல்பாட்டை மாற்றக்கூடும். எனவே, மருந்துகளை எப்போதும் சாதாரண தண்ணீருடன் எடுத்துக்கொள்வதே நல்லது.
இதையும் படிங்க : உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? எப்படி குறைப்பது?
மாத்திரை சாப்பிட்ட பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
மாத்திரையை விழுங்கும்போது 200 முதல் 250 மில்லி அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால், மாத்திரை உணவுக்குழாயில் சிக்காமல் நேராக வயிற்றுக்கு செல்லும். மருந்து சரியாக கரைந்து உடலில் செயல்பட உதவும்.மாத்திரை எடுத்த உடனே படுக்க செல்லாமல், 15 நிமிடங்கள் கழித்து படுக்க செல்வது நல்லது.
