இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக நீண்ட நாள் உழைக்க கூடிய பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகள் புழக்கத்தில் வர உள்ளது.
மத்திய அரசின் அனுமதியின்படி, சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் ரூபாய் நோட்டுகள் தலா 100 கோடி வரை அச்சடிக்கப்பட உள்ளன. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தால் எதிர்காலத்தில் மற்ற ரூபாய் நோட்டுகளிலும் பாலிமர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஏன் முக்கியம்?
தற்போது இந்திய ரூபாய் நோட்டுகள் பருத்தி அடிப்படையிலான சிறப்பு காகிதத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பாலிமர் நோட்டுகள் பாதுகாப்பு தரமான சிறப்பு பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடப்படுகின்றன.
இதனால், காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பல மடங்கு நீண்ட காலம் பயன்படுத்தலாம். தண்ணீரில் விழுந்தால் சேதமடையது. ரூபாய் நோட்டுகளை மடிப்பதால் ஏற்படும் சேதங்கள் குறையும். அழுக்கு குறைவாக ஒட்டுவதால் சுத்தமாக இருக்கும். போலி நோட்டுகள் தயாரிப்பதை மிகவும் கடினமாக்கும்.
