அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பேபி பவுடர் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான புற்றுநோய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாட்சி மற்றும் மாநில நீதிமன்றங்களில் சுமார் 69,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் 5.5 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO), டால்க் பொருட்கள் “மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள பொருள்” என அறிவித்தது. அதே நேரத்தில், இந்த வகைப்பாடு அனைத்து சூழல்களிலும் டால்க் கண்டிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று உறுதி செய்யவில்லை.
மறுபுறம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தனது டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், அமெரிக்காவில் 2020-ஆம் ஆண்டிலும், உலகளவில் 2023-ஆம் ஆண்டிலும் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுவனம் நிறுத்தியது.
டால்க் தொடர்பான முக்கிய வழக்குகளில் புற்றுநோயால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 5.5 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
