உணவுத் தேடி வந்து காருக்குள் மாட்டிக்கொண்ட கரடி., ஏர்பேக் வெடித்து கார் நாசம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், நேற்று நள்ளிரவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர், வெளியே வந்து பார்த்த போது காரில் ஒரு பெரிய கருப்பு கரடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உணவைத் தேடி காருக்குள் நுழைந்த போது காரின் கதவு மூடிக்கொண்டதால் அந்த கரடி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. வெளியேற முயன்றபோது அது காரின் ஹாரன் பகுதியில் கை வைத்ததால் தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளது. காருக்குள் அடைபட்ட கரடி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால், நேரடியாகச் சென்று கதவைத் திறப்பது பேராபத்து என்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் ஒரு வினோதமான மீட்பு திட்டத்தைத் தீட்டினர்.

இதை பார்த்த ஒரு நபர், காரின் கதவு கைப்பிடியில் கயிற்றைப் பலமாக கட்டி இழுத்து கதவைத் திறந்தார். கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடியே, அந்த கரடி காரில் இருந்து வெளியே குதித்து, அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பியது. கரடியை காருக்குள் இருந்து வெளியேறக் கடுமையாகப் போராடியதில், காரின் பாதுகாப்பு ஏர்பேக்குகள் வெடித்துச் சிதறின. மேலும் காரின் உட்புற இருக்கைகள் மற்றும் கதவுப் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன.

பொதுமக்கள் தங்கள் கார்களில் உணவுப் பொருட்களை வைக்க வேண்டாம் என்றும், கார்களை எப்போதும் பாதுகாப்பாகப் பூட்டி வைக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Post

Latest News