ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் கிடங்குகள், எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தாம்போவ் மற்றும் மாஸ்கோ அருகே உள்ள எலெக்ட்ரோஸ்டால் பகுதிகளில் அமைந்திருந்த இரண்டு பெரிய கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இரு இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், மாஸ்கோவுக்கு அருகே உள்ள மற்றொரு எண்ணெய் சேமிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கிடங்கில் இரவு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
