விஜய்யை நேரில் பார்க்கணும்., உ.பி.யில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடந்தே வரும் இளைஞர்

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்த அமன் (24) என்ற இளைஞர், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில்சந்திப்பதற்காக நீண்ட தூர பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

அமன் தனது பாதயாத்திரையை ஜூலை 3 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் இருந்து தொடங்கியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜயின் நிர்வாக அணுகுமுறை, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் அவர், தனது பாராட்டையும் நன்றியையும் நேரில் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்தப் பயணத்தில் அமன் எந்தவித பெரிய வாகன வசதியோ அல்லது சிறப்பு ஏற்பாடுகளோ இன்றி பயணித்து வருகிறார். தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி, தனது இலக்கை நோக்கி தொடர்ந்து நடந்து வருகிறார்.

அமனுக்கு நீண்ட தூர பாதயாத்திரை புதியதல்ல. இதற்கு முன்பு, AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசியை சந்திப்பதற்காக அலிகாரில் இருந்து ஹைதராபாத் வரை நடைபயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Related Post

Latest News