வயது அதிகரிக்கும் போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பான மாற்றமாகும். ஆனால், இந்த மாற்றம் பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், புகைப்பிடித்தல், தவறான உணவு பழக்கம் ஆகியவை காரணமாகிறது.
சில உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதித்து, விரைவில் சுருக்கங்கள் வர செய்கிறது. அவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. அந்த உணவுகள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
- அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள்
குளிர்பானங்கள், பேக்கரி இனிப்புகள், மிட்டாய்கள் மற்றும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது, சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற முக்கிய புரதங்கள் பாதிக்கிறது. இதனால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, சுருக்கங்கள் மற்றும் பொலிவின்மை விரைவாக தோன்ற வாய்ப்பு அதிகரிக்கும்.
இதையும் படிங்க : கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?
- அதிக கொழுப்பு நிறைந்த பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்கள் கால்சியம், புரதம் உள்ளிட்ட சத்துக்களை வழங்கினாலும், அதிக அளவில் வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிலருக்கு சருமப் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். சிலருக்கு பருக்கள், சரும எரிச்சல் போன்றவை ஏற்படும். மேலும் இது, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. எனவே, இதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
- அதிக வெப்பத்தில் சமைக்கப்பட்ட இறைச்சி
நெருப்பில் வறுத்த இறைச்சி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் உருவாகும் சில வேதிப்பொருட்கள் உடலில் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கக்கூடும். இதனால் சருமம் மங்கலாகவும், வயதைவிட முதிர்ச்சியாகவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவரா நீங்கள்? எச்சரிக்கும் புதிய ஆய்வு
- மைதா உணவுகள்
மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, பிஸ்கெட், பேக்கரி பொருட்கள் மற்றும் பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும். இதன் விளைவாக சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முதுமை அறிகுறிகள் விரைவில் ஏற்படலாம்.
- பிஸ்கெட், கேக் போன்ற உணவுகள்
அரிசி அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படும் பிஸ்கெட், கேக் போன்ற உணவுகள் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவை. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை திடீரென உயரக்கூடும். இது சருமத்தில் எண்ணெய் சுரப்பை பாதித்து, சருமத்தின் பொலிவைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
