தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

அத்திப்பழம் ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாகும். நம்மில் பலர் இதை ஒரு சாதாரண பழம் என்று நினைக்கிறோம். ஆனால் தாவரவியல் ரீதியாக இது பழம் அல்ல; பூவின் மொட்டுக்கள் ஒன்றாகச் சேர்ந்து காய் போன்ற அமைப்பிற்குள் உருவாகும் ‘சைகோனியம்’ (Syconium) என்ற மலர்க் கொத்தாகும். மல்பெரி குடும்பத்தைச் சேர்ந்த இந்த அத்திப்பழம், சுவைமிக்கதாகவும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.

அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

அத்திப்பழம் ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாகும். நம்மில் பலர் இதை ஒரு சாதாரண பழம் என்று நினைக்கிறோம். ஆனால் இதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் A, B1, B2, C, E மற்றும் K போன்ற முக்கிய வைட்டமின்களும் உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன.

இதையும் படிங்க : மாதுளம் பழம் யாருக்கு அமிர்தம்? யார் தவிர்க்க வேண்டும்?

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம்

அத்திப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்திப்பழம் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தம்

அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்தி இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

சர்க்கரை நோய்

அத்திப்பழத்தில் இயற்கை சர்க்கரை இருந்தாலும், அதனுடன் சேர்ந்துள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை வேகமாகக் கலப்பதைத் தடுக்கிறது. டைப்-1 சர்க்கரை நோயாளிகள் அத்தி இலையினால் செய்யப்பட்ட தேநீரைக் குடித்தால் அவர்களின் இன்சுலின் தேவை தோராயமாக 12 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கலோரி கொண்ட அத்திப்பழம், பசியைக் கட்டுப்படுத்தி உடலை எடையை குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க : கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?

எலும்பு அடர்த்தி

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் K ஆகியவை அத்திப்பழத்தில் அதிக அளவில் உள்ளன. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்புத் தேய்மான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அதேபோல், இதிலுள்ள வைட்டமின் A, லூடின் மற்றும் சேக்சாந்தின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையைக் கூர்மையாக்கி, மாலைக்கண் நோய் மற்றும் புரை ஏற்படுவதைத் தடுக்கின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை அத்திப்பழம் சாப்பிடலாம்?

அத்திப்பழம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. இதனால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 புதிய அல்லது உலர்ந்த அத்திப்பழங்களைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 4 அத்திப்பழங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Related Post

Latest News