இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமா இருங்க., கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்..!

கல்லீரல் என்பது மனித உடலில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்புகளில் ஒன்றாகும். இது வயிற்றின் வலது மேல் பகுதியில், விலா எலும்புகளுக்குக் கீழே அமைந்துள்ளது. மருந்துகள், ஆல்கஹால் மற்றும் உடலில் உருவாகும் சில கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேறுவதற்கு உதவுகிறது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் பலருக்கும் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நோய் தீவிரமடையத் தொடங்கும்போது சோர்வு, பசியின்மை, வயிற்று பிரச்சனை உள்ளிட்ட சில மாற்றங்கள் உடலில் தெரியத் தொடங்கலாம்.

இதையும் படிங்க : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுங்க

சோர்வு அல்லது பசியின்மை போன்ற பொதுவான அறிகுறிகள் மட்டும் இருந்தால் அதற்கான காரணத்தை மருத்துவரிடம் ஆலோசித்து கண்டறிவது நல்லது. கண்கள் அல்லது சருமம் மஞ்சள் நிறமாதல், வயிற்றில் அதிக வீக்கம், ரத்த வாந்தி, கருப்பு நிற மலம், கடுமையான வயிற்று வலி அல்லது குழப்பம் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

கீரை வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை வழக்கமான உணவில் சேர்ப்பது நல்ல தேர்வாகும். காய்கறிகளை அதிகமாகவும், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாகவும் கொண்ட உணவுமுறை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம்பழம், கிவி போன்ற பழங்களை சாப்பிடலாம்.

இதையும் படிங்க : இனிப்பான விஷம்., கூல்ட்ரிங்க்ஸில் மறைந்திருக்கும் ஆபத்துகள்

வால்நட் உள்ளிட்ட கொட்டைகள் நல்ல கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சால்மன், மத்தி, டுனா, கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 உள்ளிட்ட பல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இத்தகைய நல்ல கொழுப்புகள் கொண்ட உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?

கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளில் டிரான்ஸ் கொழுப்பு இருக்கக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க : உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்!

Related Post

Latest News