தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அண்டை மாநிலமான கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இதன் காரணமாக, கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் இருக்கப்போகிறது. தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.”

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News