விரைவு தபால் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கான புதிய வகைப்பாடு மற்றும் கட்டண மாற்றம் வருகிற ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
24 மணி நேர விரைவு தபால் சேவைக்கான பொதுமக்கள் கட்டணம், பொருளின் எடை மற்றும் அனுப்பப்படும் தூரத்தைப் பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 50 கிராமுக்குள் உள்ள ஆவணத்தை அதே நகரில் அனுப்ப ரூ.38, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும்.24 மணி சேவைக்கு ரூ.38 முதல் ரூ.100 வரை, 48 மணிசேவைக்கு ரூ.48 முதல் ரூ.72 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் பார்சல்களை ஒரே பிரிவில் கையாளுவதால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய வகைப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் இந்த புதிய நடைமுறையால், விரைவு தபால் சேவையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை அனுப்பும் முன் புதிய கட்டண விவரங்களை சரிபார்த்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
