சுகாதார விதிகளை மீறியதாக மும்பையில் பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளை மீறியதாக 5 பிரபல கிளப்புகளின் உணவு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமையல் மற்றும் உணவு தயாரிப்பு பகுதிகளில் கரப்பான் பூச்சி, ஈக்கள் தொல்லை, காலாவதியான மற்றும் கெட்டுப்போன காய்கறிகள், உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற கழிவுநீர் வடிகால், உணவுப் பொருட்களை தவறான முறையில் சேமித்தல், குளிர்சாதனப் பகுதிகளில் தண்ணீர் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

சில கிளப்புகளில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணியாற்றியதும் கண்டறியப்பட்டது. மேலும், சமையல் உபகரணங்கள் முறையாக சுத்தம் செய்யப்படாதது, உணவு சேமிப்பு வெப்பநிலை கண்காணிப்பு இல்லாமை மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்திய விவரங்கள் பதிவு செய்யப்படாததும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உணவு பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க FDA வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து உணவு நிறுவனங்களும் Food Safety and Standards Act, 2006 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று FDA தெரிவித்துள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரிசெய்த பிறகே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் மீண்டும் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

Latest News