ஏ.ஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்குநாள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கல்வி, அலுவலகப் பணிகள், தகவல் தேடல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஏ.ஐ பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், 2026-ம் ஆண்டில், உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட AI கருவிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் சாட்ஜிபிடி (ChatGPT)
இதில் OpenAI உருவாக்கிய சாட்ஜிபிடி, 2026-ம் ஆண்டில் 6,470 கோடி இணையதள பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற AI கருவிகளுடன் ஒப்பிடும்போது சாட்ஜிபிடி சிறப்பாக செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் கேன்வா (Canva)
ஆன்லைன் டிசைன் உருவாக்குவதற்காக பிரபலமான கேன்வா, AI அம்சங்களை அறிமுகப்படுத்திய பிறகு அதன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் 1,050 கோடி இணையதளப் பார்வைகளுடன் கேன்வா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில ஜெமினி ஏ.ஐ (Gemini AI)
கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள ஜெமினி ஏ.ஐ – க்கும் அதிக வரவேற்பு உள்ளது. இது 690 கோடி பார்வைகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதனை தொடந்து DeepSeek, Claude, Grok மற்றும் Perplexity ஆகிய கருவிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

