தென் கொரியாவின் சுற்றுலா தூதரானார் நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன், தென் கொரிய நாட்டின் சுற்றுலாத்துறை கௌரவத் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘டாக்டர்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வருகை தந்த தென் கொரிய அதிபருக்கு, நாட்டின் ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் பங்கேற்க நடிகை பிரியங்கா மோகனுக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தென் கொரிய அதிபரை நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் பரிமாறிக்கொண்டார்.

இந்நிலையில், ‘மேட் இன் கொரியா’ படத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக, தென் கொரிய சுற்றுலாத்துறை கௌரவ தூதராக பிரியங்கா மோகனை நியமித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Related Post

Latest News