இயக்குநர் பாரதிராஜா மறைவு: நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது உடல் இன்று இரவு அவருடைய சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை (ஜூன் 11) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Post

Latest News