‘ஜனநாயகன்’ லீக் விவகாரம் : தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் முழு படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழக இணையக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், கசிவின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட கசிவை திட்டமிட்டு பரப்பியதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Post

Latest News