மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், பாரதிராஜாவின் உடல் தேனி, காட்ரோடு பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Post

Latest News