ஜெட் வேகத்தில் சொத்து மதிப்பு உயர்வு : உலகின் முதல் டிரில்லியனர் ஆகிறார் எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்க உள்ளார்.

சமூக வலைதளமான ‘எக்ஸ்’ மற்றும் மின்சார வாகன நிறுவனமான ‘டெஸ்லா’ ஆகியவற்றின் சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.77 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு நிறுவனத்தின் மதிப்பு சுமார் 780 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது.

எலான் மஸ்க்கின் பெரும்பாலான சொத்து மதிப்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பங்குகளுடன் தொடர்புடையது. தற்போதைய கணக்கீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸில் அவருக்குள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 866 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

தற்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை தாண்டும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நிதி ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதன் மூலம் உலக வரலாற்றில் 1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற உள்ளார்.

Related Post

Latest News