4 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா உயிரிழந்தார். அவரது மறைவு தாய்லாந்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான பஜ்ரகித்தியபா (47), அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்தில் ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன்பிறகு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
சமீபத்தில் வயிற்றுத் தொற்று காரணமாக உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளவரசி பஜ்ரகித்தியபாவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
