நேர்காணலின் போது வாக்குவாதம் : மைக்கை தூக்கி எறிந்துவிட்டு பாதியில் வெளியேறிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NBC-யின் “Meet the Press” நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் கலிபோர்னியாவில் தேர்தல் முறைகேடு நடந்ததாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என தொகுப்பாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெறுவது குறித்து விமர்சனம் செய்து, தேர்தல் முறைகேடு நடைபெறுகிறது என்று மீண்டும் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் ஆதாரத்தை வழங்கவில்லை என தொகுப்பாளர் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் டிரம்ப் தெளிவான ஆதாரங்களை வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்தது. நேர்காணல் சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற பிறகு, டிரம்ப் தொகுப்பாளரையும், NBC உள்ளிட்ட ஊடக நிறுவனங்களையும் ஒருதலைப்பட்சமானவை, நேர்மையற்றவை என விமர்சித்து மைக்கை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அமெரிக்க ஊடக உலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவும் டிரம்ப் பல்வேறு ஊடக நிறுவனங்களை விமர்சித்து வந்த நிலையில், இந்த நிகழ்வு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Post

Latest News