இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக பெரிய மாற்றமின்றி இருந்த எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறையினருக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழல், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள் : புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கியா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து, பணவீக்கம் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு?
பாகிஸ்தானிலும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 414.78 பாகிஸ்தானிய ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.141 ஆகும்.
உலகிலேயே அதிக விலை கொண்ட நாடு எது?
உலகிலேயே அதிக விலையில் பெட்ரோல் விற்கப்படும் இடமாக ஹாங்காங் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 4.16 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உலகிலேயே மலிவான பெட்ரோல் கிடைக்கும் நாடு எது?
உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடாக ஈரான் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 0.029 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றான ஈரான், உள்ளூர் மானியங்கள் காரணமாக குறைந்த விலையை பராமரித்து வருகிறது.
ஈரானுக்கு அடுத்தபடியாக லிபியா, அங்கோலா, எகிப்து மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
