மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள் : புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கியா

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் Kia India புதிய “Battery as a Service (BaaS)” திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

காரின் மொத்த விலையில் சுமார் 30% முதல் 40% வரை பேட்டரி செலவு மட்டுமே இருக்கிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயங்குவார்கள்.

இந்த சூழலில் BaaS என்ற முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர் கார் வாங்கும்போது பேட்டரியை நேரடியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. காரின் அடிப்படை விலையை மட்டும் செலுத்தி, பேட்டரியை தனியாக வாடகை அடிப்படையில் பயன்படுத்தலாம்.

இந்த முறையில் பயணிக்கும் கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, MG Motor India தனது BaaS திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.3.5 வசூலிக்கிறது.

இதில் உள்ள முக்கிய நன்மை என்னவென்றால், காரின் ஆரம்ப விலை பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு நிகராக அல்லது அதைவிட குறைவாக கூட இருக்கலாம். இதனால் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News