இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது புதிய மேம்படுத்தப்பட்ட “சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் 2.0” பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
124.7 சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் லிட்டருக்கு 72 கிலோமீட்டர் மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் திரை, மொபைல் சார்ஜர் மற்றும் ஐந்து புதிய கலர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த டிஜிட்டல் திரையில் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளதால், மொபைலுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் பேட்டரி அளவை வாகனத்தை ஓட்டும்போதே அறிந்துகொள்ள முடியும். இதன் ஆரம்ப விலை 86,500 ரூபாயாக (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
