தூக்கமில்லாமல் தவிக்கும் மக்கள், சென்னை முதலிடம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ‘கிளைமேட் சென்ட்ரல்’ (Climate Central) என்ற சர்வதேச அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய ஆய்வில், இந்தியர்களின் தூக்கம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : இரவு உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

இந்தியாவில், உள்ள பெருநகரங்களில் அதிக தூக்கத்தை இழக்கும் நகரமாக சென்னை உள்ளது. சென்னையில் மட்டும் ஒரு நபர் ஆண்டுக்குச் சராசரியாக 93 மணி நேரத் தூக்கத்தை இழக்கிறார். இதில் 5 மணி நேர இழப்பு நேரடியாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பமயமாதலால் நிகழ்ந்துள்ளது.

பெருநகரங்கள் பட்டியலில் சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை 84 மணி நேரத்துடனும், கொல்கத்தா 80 மணி நேரத்துடனும், ஹைதராபாத் 75 மணி நேரத்துடனும், பெங்களூரு 67 மணி நேரத்துடனும், டெல்லி 66 மணி நேரத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதையும் படிங்க : இரவில் படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!

இரவில் ஏன் தூக்கம் கெடுகிறது?

இன்றைய காலத்தில் மரங்கள் அழிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்கள் அதிகம் கட்டப்பட்டு வருகிறது. இவை பகல் நேரக் கடும் வெயிலின் வெப்பத்தை அப்படியே உறிஞ்சி வைத்துக்கொண்டு, சூரியன் மறைந்த பிறகு இரவில் மெல்ல மெல்ல வெளியேற்றுகின்றன. இதனால் இரவிலும் அனல் காற்று வீசுகிறது.

சூரியன் மறைந்த பிறகு நிலவும் குளிர்ச்சியான சூழலில் மட்டுமே நம் உடலின் வெப்பநிலை இயற்கையாகக் குறைந்து, ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டும் மெலடோனின் சுரப்பு சீராக இருக்கும். ஆனால், இரவிலும் வெப்பம் குறையாமல் இருக்கும்போது உடலின் இயல்பு வெப்பநிலை குறையாமல் தூக்கம் தடைபடுகிறது.

Related Post

Latest News