வரலாறு காணாத அளவில் தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 96.11 ஆக சரிந்து புதிய வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை 95.94 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, மதிய வர்த்தகத்தில் 96.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதையும் படிங்க : நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி

பொருளாதார நிபுணர்கள் கூறுவதன்படி, கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் ரூபாய் மதிப்பில் இன்னும் சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ரூபாய் மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது.

Related Post

Latest News