நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.103.98, டீசல் ரூ.95.50 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84 இலிருந்து ரூ.3.14 உயர்ந்து ரூ.103.98 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையும் ரூ.92.39 இலிருந்து ரூ.3.11 உயர்ந்து ரூ.95.50 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக காய்கறி முதல் பல்வேறு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
