சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான ‘நயாரா எனர்ஜி’ பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.
நயாரா எனர்ஜி நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த அனைத்து நிலையங்களிலும் புதிய விலைக்குறைப்பு இன்று முதல் (ஜூலை 1) நடைமுறைக்கு வந்துள்ளது.
இருப்பினும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரிகள் மற்றும் வாட் (VAT) கட்டண மாறுபாடுகள் காரணமாக, ஒவ்வொரு நகரத்திலும் சில்லறை விற்பனை விலை சற்று மாறுபடலாம். இந்த விலைக்குறைப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
