வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

சர்வதேச சந்தையில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நாளை (ஜூலை 1) முதல் முழுமையாக நீக்குவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பின்னணி

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடுமையான போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு உருவானது. இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து, உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், பெட்ரோல், டீசலை மொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்தவகையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

நாளை முதல் இயல்பு நிலை

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர் பதற்றம் பெருமளவு தணிந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகமும், பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைத்து வருகிறது. எனவே, நாளை (ஜூலை 1, 2026) முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவதாக மத்திய பொதுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதையச் சூழல் சீரடைந்துள்ளதால் முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

Latest News