இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து, 95.85 வரை சரிந்துள்ளது.

சமீப நாட்களில் நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்று 95.71 ஆக இருந்த நிலையில், இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் 95.73 ஆக இருந்தது. பின்னர் அதே நாளில் 95.85 வரை சரிந்து புதிய குறைந்த அளவை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 106 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

Related Post

Latest News