மனைவி மீது சந்தேகம், வீட்டுக்குள் ரகசிய கேமரா வைத்த கணவன் : இறுதியில் நடந்த சோகம்

திருமணமான வெறும் 47 நாட்களில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மும்பை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அடுத்த அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்த டாக்டர் நிதின் தில்கர் என்பவருக்கும், விசாகா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. ஆனால், இவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே விசாகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை படுத்தியுள்ளனர்.

இதற்கெல்லாம் மேலாக, நிதினுக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், விசாகா என்ன செய்கிறார், யாருடன் பேசுகிறார் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்க வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.

விசாகா வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சாதாரணமாகப் பேசினால் கூட, கேமராவில் பார்த்துவிட்டு கணவரும் அவரது குடும்பத்தினரும் விசாகாவை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த விசாகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகளின் மரணத்திற்கு கணவர் குடும்பமே காரணம் என பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாக்டர் நிதின் தில்கர், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related Post

Latest News