இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவை குறிவைத்து சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போன், முந்தைய M சீரிஸ் மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த போன் மேலும் மேம்பட்ட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாதுகாப்பு அம்சமாக ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம். இதனால் விரைவான மற்றும் பாதுகாப்பான அன்லாக் அனுபவம் கிடைக்கும்.
செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 செயலி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் 8GB ரேம் மற்றும் 128GB உள்நாட்டு சேமிப்பு வசதி வழங்கப்படலாம். மேலும், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8 இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை விவரங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக செயல்திறன், சிறந்த மல்டிடாஸ்கிங் அனுபவம் மற்றும் அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் உருவாகும் இந்த ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் சாம்சங் ரசிகர்களுக்கு புதிய தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
